சர்க்கரை, உப்பு, எண்ணெய், வெப்பம்! | ருசிக்கும் முன் யோசி

சர்க்கரை, உப்பு, எண்ணெய், வெப்பம்! | ருசிக்கும் முன் யோசி
Updated on: 
2 min read

உலக வரலாற்றில் ‘கிரேட் டிப்ரெஷன்’ (Great Depression) காலம் முக்கியமான ஒன்று. கடும் பொருளாதார வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் விளைவும் பல மாற்றங்களை உலகில் உருவாக்கின.

நவீன அறிவியலின் சில உச்சங்கள், பெரும் தொழில்மயமாதலின் தொடக்கம், பெரும் உணவுச்சந்தைகளின் பிறப்பு எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடங்கிய காலம் இதுதான்.

போருக்காகப் பெரும் அளவில் உணவைப் பதப்படுத்திவைக்கும் போக்கு, அதற்காகக் கண்டறியப்பட்ட பல உத்திகள் எல்லாம் போர் முடிந்த பின்னர் அவற்றைப் பெருமளவில் சந்தைப்படுத்தும் சூழலைப் பின்னாள்களில் உருவாக்கின. சிப்ஸ், ஃபிளேக்ஸ், மார்க ரைன், பிஸ்கட், சோடா குளிர்பானங்கள், பீட்சா, பர்கர் என எல்லாமே அதன் பின்னர் தான் மிகப்பெரும் அளவில் சந்தைக்குள் வந்தன.

பெருங்கவலைக்காலம்

இந்தப் பெருங்கவலைக் காலம்தான் அதிதீவிர பதப்படுத் தும் பொருள்கள் உண்டானதற்கு நேரடி காரணம் எனச் சொல்ல முடியாது. எனினும், இக்காலம் சக்கை உணவின் சகாப்தத்துக்கு நிச்சயம் முக்கியக் காரணமே. 1929-33இல் இருந்த அந்தப் பெருங்கவலைக்காலம் ‘வால் ஸ்டிரீட்’இன் வீழ்ச்சியில் தொடங் கியது என்பார்கள்.

ஆனால், இன்றைக்கு அதே ‘வால் ஸ்டிரீட்’ மனநிலை நகர்ப்புற இன்ஸ்டா உலக மக்களில் பலருக்கு இருப்பது போலவே எனக்குப் படுகிறது. நிச்சயமற்ற, சமூகப் பாதுகாப்பற்ற, அந்த ‘கெரேட் டிப்ரஷன்’ மனநிலை, இன்றைக்குக் கிட்டத்தட்ட ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒட்டியிருக்கிறது.

Loading content, please wait...

X