கிரீம் பிஸ்கட் | ருசிக்கும் முன் யோசி 2

கிரீம் பிஸ்கட் | ருசிக்கும் முன் யோசி 2
Updated on: 
2 min read

கிரீம் பிஸ்கட் பிடிக்காத குழந்தைகள் உலகில் இருப்பதற்குச் சாத்தியமில்லை. சின்ன குழந்தையாக இருக்கும்போது, இரண்டு வட்ட வடிவ பிஸ்கட்டுகளுக்கு இடையே நடுவில் ஒட்டியுள்ள ஏலக்காய் மணமோ அல்லது ஆரஞ்சு மணமோ கொண்டு, கூடவே ஏகப்பட்ட இனிப்பைத் தூவியிருக்கும் கிரீமை நாவால் தடவி மகிழ்ந்த கூட்டத்தில் நானுமே உண்டு.

பிஸ்கட் சந்தை

இன்றைக்கு அதைவிடப் பல மடங்கு சுவையும் ஈர்ப்பும் கொண்ட பிஸ்கட்டுகளைச் சாப்பிடும் குழந்தைகளைப் பார்க்கையில் மனம் சற்றுப் பதைபதைக்கிறது. எப்போதோ கணக்குப் பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கியதற்காக முதுகுக்குப் பின்னால் மறைத்துவைத்து அப்பா கிரீம் பிஸ்கட் பாக்கெட் கொண்டுவந்த காலம் அல்ல இது.

அப்போதுகூட அந்த பாக்கெட்டில் இருந்து, ஒன்றோ இரண்டையோ அம்மா கொடுத்துவிட்டு, மீதியை ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒளித்து வைத்துவிடுவார். ஆனால், இன்று அந்த பிஸ்கட்டுகள் கைக்கு எட்டாத பொருள் இல்லை.

ஐந்து ரூபாய்க்கோ அல்லது பத்து ரூபாய்க்கும்கூட கண்ணைக் கவரும் அழகிய ஞெகிழிப் பையில் எல்லாருக்கும் கிடைக்கும் பொருளாகிவிட்டது. ஒரு ரயில் பயணத்தில், என் அருகில் இருந்த குழந்தை முழு பாக்கெட் கிரீம் பிஸ்கட்டை வேகமாகச் சாப்பிடுவதைப் பார்த்தபோது, மனம் அச்சத்துடன் அதன் ஆபத்தைக் கணக்கிட்டது.

ஆம்! தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் (ultra process foods) கிரீம் பிஸ்கட் முக்கியமானது. இப்போதெல்லாம் சகாய விலையில் கிரீம் பிஸ்கட்டைச் சுவைக்க இயலும் என ஆகிப்போனதில், அதன் சந்தை மட்டும் கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடி (குக்கீஸ், கிராக்கர்ஸ் சேர்க்காமல்) என்கிறது ஒரு வணிகக் கணக்கீடு. உலகச் சந்தை சில நூறு பில்லியன் டாலர்கள்!

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in