கோடைக்கால சருமப் பராமரிப்பு

கோடைக்கால சருமப் பராமரிப்பு
Updated on
2 min read

கோடைக்காலம் தொடங்கும்போது, சீரற்ற சரும நிறம், அடிக்கடி ஏற்படும் முகப்பருக்கள், அதிகப்படியான முடி உதிர்தல் போன்ற கவலைகளும் அதிகரித்துவிடுகின்றன.

இதற்குப் பெரும்பாலும் சூரிய வெப்பமே காரணம் என்று கூறப்பட்டாலும், அதிகப்படியான வெப்பம், உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு போன்றவையும் சருமம், தலையின் சமநிலையைச் சீர்குலைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அதிக வெப்பநிலையும் புறஊதாக் கதிர் வீச்சும் சருமத்தின் வெளித்தோற்றத்தை மட்டும் பாதிப்பதில்லை. அவை சருமம் செயல்படும் விதத்தையே மாற்றுகின்றன.

வெப்பத்தால் ஏற்படும் அழுத்தம், புறஊதாக் கதிர்வீச்சு ஆகியவை சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கைச் சிதைப்பதோடு, நீர்ச்சத்து இழப்பையும் அதிகரிக்கின்றன. இதனால் சருமம் எளிதில் எரிச்சல், வீக்கம், கறுமை நிற மாற்றத்துக்கு உள்ளாகிறது.

மக்கள் பெரும்பாலும் தற்காலிகத் தீர்வுகளுக்காகச் சருமத்தில் பூசும் கிரீம்கள் அல்லது வீட்டு வைத்தியங்களைச் சார்ந்திருக்கிறார்கள். இவை தற்காலிக ஆறுதலைத் தந்தாலும், சருமத்தின் அடிப்படையான சமநிலையின்மையைச் சரிசெய்வதில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in