தலைமுடி உதிர்கிறதா? | நலம் அறிவோம்

தலைமுடி உதிர்கிறதா? | நலம் அறிவோம்
Updated on
1 min read

இன்றைய அவசர உலகில் முடி உதிர்தல், பொடுகு, முடிப்பிளவு போன்ற பிரச்சினைகளை மக்கள் அதிக அளவில் எதிர்கொள் கின்றனர். அதனால், கவலையிலும் மூழ்கிவிடு கின்றனர்.

ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்குச் சத்துக்குறைபாடு, முடி பராமரிப்பின்மை போன்றவையும் காரணமாக அமைகின்றன. இவற்றைக் களைவதற்கான சில குறிப்புகள்:

விட்டமின்களின் குறைபாடும்கூடத் தோல், கூந்தலைப் பாதிக்கும் சாத்தியம் உண்டு. எனவே விட்டமின் ஏ, டி, இ, துத்தநாகம், செலினியம், புரதம், இரும்புச் சத்து, கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் ஆகியவை தலைமுடி ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம்.

வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்குக் குளிக்க வேண்டும். சல்பேட், பாரஃபின் இல்லாத ஷாம்புகளைக் குளியலுக்குத் தேர்வுசெய்ய வேண்டும்.

பளபளப்பை அதிகரிக்கக்கூடிய, வேதிப் பொருள்கள் குறைவாக உள்ள ஷாம்புகள், கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது நல்லது.

தலைக்குக் குளித்த பின் முடியை அழுத்தியோ வேகமாகவோ துடைக்கக் கூடாது. அதிக அழுத்தம் முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்யலாம். வாரம் ஒரு முறை தலைக்கு மசாஜ் செய்வதால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது முடி உதிர்வதைத் தடுக்கும்.

முடியை உலர்த்த ஹேர் டிரையர், ஸ்ட்ரெய்ட்னர் போன்ற கருவிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம். இவை முடியையும் தலையையும் சேதப்படுத்தலாம். அன்றாடம் 8 மணி நேரம் உறக்கம் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, தலைமுடி ஆரோக்கியத்துக்கும் அவசியம்.

தலைமுடி உதிர்கிறதா? | நலம் அறிவோம்
ஒரு சகாப்தத்தின் வரலாற்றுப் பதிவு..!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in