

உலக தொழுநோய் நாள் (ஜன.30) அனுசரிக்கப்பட்ட நிலையில், அது பற்றிய சில தகவல்கள்:
* தொழுநோய் 'மைகோபாக்டீரியம் லெப்ரே' வகை பாக்டீரியத் தொற்றால் ஏற்படுகிறது.
* தேமல், சரும நிறமாற்றம், தசை உணர்விழப்பு, நரம்பு வீக்கம் போன்றவை தொழுநோய்க்கான அறிகுறிகள். முறையான சிகிச்சை பெற வில்லையெனில் காலப்போக்கில் விரல் இழப்பு உண்டாகக்கூடும்.