திறன்பேசி: தனித்திரு, தள்ளியிரு! | உள்ளங்கையில் ஒரு சிறை 26

திறன்பேசி: தனித்திரு, தள்ளியிரு! | உள்ளங்கையில் ஒரு சிறை 26
Updated on
2 min read

டிஜிட்டல் டீடாக்ஸ் என்னும் நச்சு நீக்கம் பற்றிப் பார்த்தோம். சில நாள்களாவது திறன்பேசிகளைச் சுத்தமாகப் பயன்படுத்தாமல் இருந்துவிட்டு மீண்டும் பயன்படுத்தும்போது எப்படிப் பயன் படுத்தலாம் என்பதைப் பார்ப்போம். இதனை டிஜிட்டல் சிக்கனம் (Digital Minimalism) என்று அழைக்கிறார்கள் என்றும் பார்த்தோம்.

டிஜிட்டல் சிக்கனத்தின் முக்கியமான இரண்டு கூறுகள்:

1. கூடிய மட்டும் திறன்பேசிகள் / கணினிகளைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைப்பது.

2. அப்படியே பயன்படுத்தினாலும், பயன்படுத்தும்போது மிகக் கவனமாகப் பயன்படுத்துவது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் பிறந்தவர்களை ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கும் வழக்கம் தற்போது பிரபலமாகி இருக்கிறது. அதன்படி 1946-1964 காலக்கட்டத்தில் பிறந்த வர்கள் என்றால் பூமர் எனக் கிண்டல் செய்யப்படுகிறது (Baby boomer தலைமுறை)

1965 - 1980 காலக்கட்டம் என்றால் ஜென் எக்ஸ் (Generation X)

1981 - 1996 என்றால் ஜென் ஒய் – அல்லது மில்லேனியல் (GenY or Millenials)

1997 - 2012 என்றால் ஜென் ஸீ (Gen Z)

2013- 2024 என்றால் ஜென் ஆல்ஃபா (Gen alpha)

2025க்குப் பின் என்றால் ஜென் பீட்டா (Gen Beta) (ஜென் என்பது தலைமுறையைக் குறிக்கும் ஜென ரேஷன் என்பதன் சுருக்கம்).

ஒரே காரணம்

இப்போது இது எதற்கு என்கிறீர் களா? 2017இல் அமெரிக்க உளவியல் பேராசிரியர் ட்வெஞ்ச் (Twenge), 'அட்லாண்டிக்' இதழில் புகழ்பெற்ற ஒரு கட்டுரையை எழுதினார். அதன் தலைப்பு, ‘திறன்பேசிகள் ஒரு தலைமுறையை அழித்துவிட்டனவா?’ (Have smartphones destroyed a generation?). அவர் 1996க்குப் பின் பிறந்த தலைமுறையினரை ஐ-ஜென் (iGen) என்கிறார்.

அதாவது, இணையத் தலைமுறையினர். இவர்களை ஜென் ஸீ (Gen Z) என்றும் சொல்கிறார்கள். முந்தைய தலைமுறையினரைவிட இத்தலைமுறையினரிடம் அதிக மனப் பதற்றம், மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை அதிகம் காணப்படுவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in