ஜெட் லேக் பிரச்சினை தெரியுமா?

ஜெட் லேக் பிரச்சினை தெரியுமா?
Updated on
1 min read

ஜெட் லேக் பிரச்சினை என்பது விமானத்தில் பல நேர மண்டலங்களை (Time zones) விரைவாகக் கடந்து செல்வதால், நம்முடைய உடலில் உள்ள இயற்கையான கடிகாரமும் (Circadian rhythm) புதிய இடத்தின் நேரமும் ஒத்துப் போகாமல் போவதால் ஏற்படும் தற்காலிக தூக்கக் கோளாறு.

அதனால்தான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கும் அங்கிருந்து இங்கே வரும்போதும் தற்காலிகமாகத் தூக்கப் பிரச்சினைகளைப் பயணி எதிர் கொள்கிறார்.

ஜெட் லேக்கின் முக்கிய அறிகுறிகள் சோர்வு, பகலில் தூங்கிக்கொண்டே இருப்பது போன்றவை. செல்கள், உறுப்பு களில் தாக்கத்தை இது ஏற்படுத்தலாம். தலை வலி, தசை வலிகளை ஏற்படுத் தலாம்.

செரிமானத்தில் இடையூறு ஏற்பட்டுக் குமட்டல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகலாம். இதனால் மனமும் பாதிக்கப்படும். மந்தத்தன்மை ஏற்பட்டுக் கவனம் சிதறலாம். விஷயங்களை எளிதில் மறக்கவும் நேரிடலாம்.

புதிய நேரத்துக்கு ஏற்ப விரைவாக மாறிக்கொள்வது, பகலில் சூரிய ஒளியைப் பெற்று உடலில் நேர மாற்றத்தை விரைவுப்படுத்துவது, விமானப் பயணத்தின்போதே போதிய அளவு தண்ணீர் குடித்து உடலைப் பராமரிப்பது, பயணத்தில் மது, காஃபின் பானங்களைத் தவிர்ப்பது போன்றவை ஜெட் லேக் பாதிப்பிலிருந்து மீள உதவும்.

ஜெட் லேக் பிரச்சினை தெரியுமா?
மண்ணில் புதைந்திருக்கும் அருங்காட்சியகம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in