

இன்சுலின் சிகிச்சை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதில் மிக முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்று. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இது மிகவும் பயனுள்ள சிகிச்சை யாகத் தொடர்கிறது.
இன்றும் அன்றாட பேசல் (Basal) இன்சுலின் ஊசி பெரும்பாலான நோயாளிகளுக்கு நிலையான சிகிச்சையாக இருந்தாலும், வாரத்துக்கு ஒருமுறை செலுத்தப் படும் பேசல் இன்சுலின் போன்ற புதிய சிகிச்சை முறை அதிகக் கவனத்தை ஈர்த்துவருகிறது.
ஆனால், சிகிச்சையைத் தேர்வுசெய் வதில் வசதி மட்டுமே முக்கிய மானது அல்ல. ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை, வாழ்க்கை முறை, சிகிச்சை இலக்குகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே சரியான இன்சுலின் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இன்சுலின் ஏன் முக்கியம்?
நீரிழிவு என்பது காலப்போக்கில் தீவிர மடையும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல கணையம் (Pancreas) போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாமல் போகலாம். அப்போது மாத்திரைகள் மட்டும் போதுமானதாக இருக்காது. அந்த நிலையில் இன்சுலின் சிகிச்சை மிகவும் அவசியமாகிறது.
இன்சுலின் சிகிச்சையின் நன்மை
* ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
* நீரிழிவு தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
* வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்து கிறது.
* நீண்டகால நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது.
இன்சுலின் சிகிச்சையைத் தொடங்குவது தோல்வியின் அறிகுறி அல்ல. அது, நோயைச் சிறப்பாகக் கட்டுப்படுத்துவதற் கான முக்கியமான சிகிச்சையின் அடுத்த படியாகும்.
நம்பகமான சிகிச்சை
அன்றாட பேசல் இன்சுலின், பகல், இரவு முழுவதும் உடலுக்குத் தேவையான அடிப்படை இன்சுலின் அளவைத் தொடர்ந்து வழங்கு கிறது. வெறும் வயிற்றில் (Fasting) எடுத்துக் கொள்வது, இரு வேளை உணவுக்கு இடையிலான ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.