

முட்டையைப் பொறுத்தவரை அரை நூற்றாண்டுகளாக நிலவிவரும் தவறான கற்பிதம் முட்டையின் மஞ்சள் கருவைப் பற்றியதுதான். இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகள்கூட முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்க்கும் அளவு, மஞ்சள் கருவின் மீது பயம் நிலவிவருகிறது.
காரணம், 1950கள் தொடங்கி 2000 வரை மேற்கத்திய நாடுகளில் உள்ள மருத்துவ உலகம், முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மூலம் ரத்த கொலஸ்ட்ரால் அதிகரித்து, அதன் மூலம் இதய நோய் ஏற்படும் சாத்தியம் உள்ளது என்று நம்பியது.
எனினும் 2000க்குப் பிறகு செய்யப்பட்ட தரம் மிகுந்த ஆய்வுகளின் முடிவு களில், உணவு மூலம் உண்ணப்படும் கொலஸ்ட்ராலுக்கும் ரத்த கொலஸ்ட்ராலுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரியவந்தது. இதன் விளைவாக, அன்றாடம் ஒரு முழு முட்டையை உண்பதால் எந்தப் பிரச்சினையும் இதயத்துக்கு ஏற்படு வதில்லை என்று அமெரிக்க இதய நல சிகிச்சையாளர்கள் சங்கம் அறிவித்தது.
என்ன பயன்?
முட்டையின் வெள்ளைக் கருவில் 4 கிராம் புரதம் மட்டுமே உள்ளது. ஆனால், மஞ்சள் கருவிலோ 3 கிராம் புரதச்சத்துடன், ஒமேகா-3 உள்ளிட்ட ஒற்றைச் சங்கிலி நிறைவுறா கொழுப்பு, பல சங்கிலி நிறைவுறா கொழுப்பு ஆகியன அடங்கியுள்ளன. இவை இதயத்துக்கு நன்மை செய்பவை என்று அறியப்பட்டுள்ள கொழுப்பு வகை.
இவையன்றி, நரம்புகளுக்கு ஊட்ட மளிக்கும் விட்டமின் பி12, மூளையின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. இதிலுள்ள கோலின் அல்சைமர் உள்ளிட்ட நினைவிழப்பு நோய்களைத் தடுக்கும். கண் பார்வைக்குத் தேவையான விழிப் படலமான ரெடினாவின் நலனைக் காக்கும்.
லியூட்டின், சியாசான்தைன் ஆகியவை கண் புரை நோய், ரெடினா அழற்சி ஏற்படுதைத் தடுக்கின்றன. அன்றாடம் முட்டை சாப்பிடுபவர் களுக்கு எலும்புகள் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது. காரணம், முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள புரதமும் விட்டமின் டி சத்தும்தான்.
மஞ்சள் கரு - இயற்கை அளித்த விட்டமின் காம்ப்ளெக்ஸ் மாத்திரையாகும். மஞ்சள் கருவில் விட்டமின் ஏ, விட்டமின் பி காம்ப் ளக்ஸ், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், துத்த நாகம், செலினியம் ஆகியவை நிரம்பி யுள்ளன. ஒப்பீட்டளவில் வெள்ளைக் கருவில் கொஞ்சம் நீர்ச்சத்து புரதம் மட்டுமே உள்ளன.