சிறுநீரகக் கற்கள்: தண்ணீர் குடித்தால் போதுமா?

சிறுநீரகக் கற்கள்: தண்ணீர் குடித்தால் போதுமா?
Updated on
2 min read

சிறுநீரகக் கற்களைத் தடுக்க நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இதை முழுமை யாகத் தவிர்க்க உணவுப் பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்கள் தேவை.

சமீபத்திய ஆய்வுகளின் படி, இந்தியாவில் சிறுநீரகக் கல் பாதிப்பு மிக வேகமாகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலும் அதிகரித்துவருகிறது. சிறுநீரகக் கற்கள் வயதான வர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்கிற நிலை மாறி 'ஜென் ஸீ' வயதினரிடமும் சுமார் 25% வரை உயர்ந்துள்ளது கவலையை ஏற்படுத்துகிறது.

உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடும், போதிய அளவு தண்ணீர் குடிக்காததும் சிறுநீரகக் கற்கள் உருவாவதற்குக் காரணங்கள். ஆனால், நாம் உண்ணும் பதப் படுத்தப்பட்ட (Processed) உணவு வகைகளும் ஒரு முக்கியக் காரணம்.

சோடியம், ஆக்ஸலேட் சத்துகள் அதிகமுள்ள இத்தகைய உணவு வகைகள், சிறுநீரில் கால்சியம், ஆக்ஸலேட் அளவைப் பன்மடங்கு உயர்த்தி, மிக எளிதாகச் சிறுநீரகக் கற்களை உருவாக்கி விடுகின்றன.

எனவே, சிறுநீரக ஆரோக்கி யத்தைப் பாதுகாக்க, வெறும் தண்ணீர் குடிப்பதை மட்டுமே கடமையாகக் கருதாமல், கற்கள் உருவாவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும். அதற்கு உணவு முறை யிலும் அவசியமான மாற்றங்கள் உடனே தேவை.

தூண்டும் காரணங்கள்

இன்று பலரும் பதப்படுத்தப்பட்ட உணவு முறைகளைப் பெரிதும் நாடுகிறார்கள். சோடியம் (அதிக உப்பு), புரதங்கள் நிறைந்த அசைவ உணவு வகைகளை அதிகம் உட் கொள்கின்றனர். இவை சிறுநீரகப் பாதையைத் தீவிரமாகப் பாதித்து, மிக விரைவாகக் கற்கள் உருவாகத் தூண்டுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in