

இன்றைய வேகமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி குறைவு, மன அழுத்தம் போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இதய நோய்கள் அதிகரித்துவருகின்றன. இந்த அம்சங்கள் பற்றி விழிப்புணர்வு இருந்தால், இதயத்துக்குப் பாதுகாப்பு அளித்து விடலாம். இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். ‘நலம் வாழ’ இதழில் மருத்துவர் கு.கணேசன் எழுதிய வெற்றிகரமான தொடரான ‘இதயம் போற்று’, இது சார்ந்த விழிப்புணர்வை நூல் வழியாக ஏற்படுத்தும் மகத்தான பணியைச் செய்துவருகிறது. இதயம், இதய நோய்கள் பற்றியும், இந்த நோய்க்குப் பாதை வகுக்கும் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் எடை உள்பட பல அம்சங்களையும் நூல் அலசுகிறது. இதயப் பாதுகாப்பை விரும்பும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூல் இது.
இதயம் போற்று
மருத்துவர் கு.கணேசன்,
இந்து தமிழ் திசை பதிப்பகம்,
தொடர்புக்கு: 7401296562