புதிய திறப்பை உண்டாக்கும் | நம் வெளியீடு

புதிய திறப்பை உண்டாக்கும் | நம் வெளியீடு
Updated on
1 min read

ஈரம் கசி​யும் நிலத்​தைப் போல நெகிழ்​வும் தன்​மை​யும் நிறைந்​தவை சு.தமிழ்ச்​செல்​வி​யின் படைப்​பு​கள். கடு​கைப் பிளந்து ஏழு கடலைப் புகுத்​தி​யது​போல், ‘அகத்​தில் அசை​யும் நதி’ எனும் இந்​நூலில் இடம்​பெற்​றுள்ள ஒவ்​வொரு கட்​டுரை​யும் ரத்​தினச் சுருக்​கம்.

கதை நிகழும் களத்​துக்கு நம்​மைக் கையோடு அழைத்​துச் சென்று விவரிப்​பது தமிழ்ச்​செல்​வி​யின் பலம். இந்​தத் தொகுப்​பில் இடம்​பெற்​றுள்ள எல்​லாருமே எளிய மனிதர்​கள். மூன்று வேளை உணவுக்கே அல்​லாடு​கிறவர்​களாக இருந்​தா​லும் கம்​பீரம் குலை​யாதவர்​கள்.

அறம் பிறழ்ந்த சமூகத்​தின் இந்​தக் கோர​முகத்​தைத் தன் சொற்​களின்​வழி கேள்விக்​குள்​ளாக்​கு​கிறார் தமிழ்ச்​செல்​வி. தன் பணி அனுபவங்​களை விவரிக்​கும் இவர், எல்லா இடங்​களி​லும் ஏழைகளின் பக்​கமே நிற்​கிறார். மரபார்ந்த வழக்​கங்​களைச் சொல்​லும் அதே​நேரம் நாம் முன்​னேற வேண்​டிய பாதையை​யும் இந்​தத் தொகுப்​பின்​வழி துலக்​கப்​படுத்​துகிறார் தமிழ்ச்​செல்​வி. வாசிக்​கிறவர்​களின் மனங்​களில் இந்​நூல் நிச்​ச​யம் ஒரு திறப்பை உண்​டாக்​கும் என்​ப​தில் சந்​தேகமே இல்​லை.

அகத்தில் அசையும் நதி

சு.தமிழ்ச்செல்வி

இந்து தமிழ் திசை வெளியீடு

விலை: ரூ.180

ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications

தொடர்புக்கு: 7401296562

புதிய திறப்பை உண்டாக்கும் | நம் வெளியீடு
வட்டார வாழ்வியலின் சாட்சியாகத் திகழும் உணவுகள் | நம் வெளியீடு
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in