மூளைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

மூளைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?
Updated on: 
2 min read

உலக அளவில் ஏழை நாடுகளில் மூளைக் காய்ச்சலின் பாதிப்பு சற்று அதிகம். ஆசியாவிலும் அதன் தாக்கம் அதிகம். ஒவ்வோர் ஆண்டும் ஆசியா

வில் மூளைக் காய்ச்சல், ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்கு உள்பட்ட 50,000 -1,00,000 பேரில் 20,000-25,000 பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அறிகுறிகள் என்னென்ன?

மூளைக் காய்ச்சலை ‘மெனிஞ் சைடிஸ்’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. தமிழில் மூளைச் சவ்வு அழற்சி என்று பெயர். குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் என்பது ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. 2 முதல் 15 நாள்கள் வரை அதன் அறிகுறிகள் தெரிந்துகொண்டே இருக்கும்.

பாதிக்கப்படும் குழந்தைகளுக்குக் காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, குழந்தை மிகவும் நோயுற்றுக் காணப்படுவது, கழுத்தையும் தலையையும் பின்னோக்கி வளைத்துப் படுத்திருப்பது, தலையைக் கால் முட்டிகளுக்குக் கொண்டு போக முடியாதபடி முதுகு விறைப்பாக இருப்பது, ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தலை உச்சியின் மென் பகுதி மேல் நோக்கிப் புடைத்திருப்பது போன்றவை எல்லாம் இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள்.

இவற்றோடு வாந்தியும் இருக்கும். பாதிக்கப் பட்ட குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும் அல்லது எரிச்சலுடன் காணப்படும். எதையும் சாப்பிடாது.

Loading content, please wait...

X