ஏ.டி.ஹெச்.டி, ஆட்டிசம், திறன்பேசிகள்! | உள்ளங்கையில் ஒரு சிறை 23

ஏ.டி.ஹெச்.டி, ஆட்டிசம், திறன்பேசிகள்! | உள்ளங்கையில் ஒரு சிறை 23
Updated on
2 min read

ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் மிக முக்கியமானது கவனச்சிதறல் என்பதைப் பார்த்தோம். குறிப்பாகச் சிறார், பதின்வயதினரிடையே அந்தப் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது என்பதைக் கடந்த வாரக் கட்டுரையில் பார்த்தோம்.

அதிலும் சிறாரை அதிகம் பாதிக்கும் ஏ.டி.ஹெச்.டி.என்னும் அதீதத் துருதுருப்பு/ கவனச் சிதறல் (Attention Deficit Hyperactivity Disorder –ADHD), ஆட்டிசம் போன்ற பாதிப்புகள் இருப்பவர்களுக்குத் திறன்பேசிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்து கின்றன.

ஏ.டி.ஹெச்.டி. இருக்கும் சிறார், பதின்வயதினரிடம் மூளையின் டோபமின் செயல்பாடு குறைவாக இருக்கும். அவர்களால் ஒரு விஷயத் தில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது. எளிதில் சலிப்புற்று அடிக்கடி கவனச் சிதறலை ஏற்படுத்தும் டோபமின் தூண்டுதலுக்காக ஏங்கத் தொடங்கிவிடுவார்கள். பள்ளியில் இருக்கையில் அமர்ந்தி ருக்க முடியாது.

வரிசையில் காத்திருக்கப் பொறுமை இருக்காது. திறன்பேசிகளில் புதிதுபுதிதாக முடிவே இல்லாமல் விஷயங்கள் வந்து கொண்டே இருப்பதால், அவர்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் திறன்பேசி களைப் பார்த்துக்கொண்டே இருப் பார்கள். இது ‘Doom scrolling’ எனப் படுகிறது. அதாவது, அழிவு அல்லது சேதப்படுத்தக்கூடிய அளவுக்குத் திறன்பேசிகளைப் பார்த்துக்கொண்டே இருப்பது.

திறன்பேசிகளில் வரும் ஒவ்வொரு புதிய அறிவிப்பும், விருப்பக்குறியும், காணொளிக் காட்சியும், பதிவும் மூளையில் டோபமின் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. ஆகவே தொடர்ச்சியாகப் போதைபோல் இதைப் பார்த்துக்கொண்டே இருக்கவைக் கிறது. இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. கவனச் சிதறல் இருப்பது போன்றே கவனமின்மையும் (inattention) அதிகமாக இருக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in