‘கோல்டன் ஹவர்’ சிகிச்சை | நலம் அறிவோம்

‘கோல்டன் ஹவர்’ சிகிச்சை | நலம் அறிவோம்
Updated on
1 min read

மாரடைப்பு பற்றிப் பேசும்போது பொன்னான நேரம் (கோல்டன் ஹவர்) பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. உடனடியாக மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உடையது மாரடைப்பு. ஆனால், மாரடைப்பு அறிகுறிகள் தெரிந்த பிறகும் ‘பொன்னான நேர’த்தைத் தவறவிடுபவர்கள் ஏராளம்.

மாரடைப்பு சார்ந்த பிரச்சினைக்கு மட்டுமல்ல; சாலை விபத்து உள்ளிட்ட ஏனைய அவசர சிகிச்சைகளுக்கும் இது பொருந்தும். அதைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஒரு நோய்க்கோ பிற உடல்நலப் பாதிப்புகளுக்கோ மருத்துவ சிகிச்சை தேவை என்கிற நிலை ஏற்படுகிற போது குறிப்பிட்ட நேரத்துக்குள் சிகிச்சை வழங்கிவிட்டால், பெரிய பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றி விட முடியும்.

சிகிச்சை வழங்குவதற்கான அந்த நேரம்தான் ‘பொன்னான நேரம்’. அதேநேரம், ‘பொன்னான நேரம்’ நோய்க்கு ஏற்றவாறு மாறுபடும் என்கின்றனர் மருத்துவர்கள். சாலை விபத்து தொடங்கி இதய நோய், பக்க வாதம், பிரசவம் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.

அதாவது, முதலுதவி வழங்குவதில் தொடங்கி முறையான சிகிச்சைக்கு உடனடியாகப் பரிந்துரைப்பதுவரை அனைத்துமே ‘பொன்னான நேர’த்துக்குள் வரும்.

‘கோல்டன் ஹவர்’ சிகிச்சை | நலம் அறிவோம்
வருடாந்திர மருத்துவப் பரிசோதனை தேவையற்றதா? | மறையாத கட்டுக்கதைகள் 22

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in