

கேள்வி: எனக்கு வயது 54. தலையின் மேலே ஐந்து ஆண்டுகளாக இரண்டு கட்டிகள் உள்ளன. இதனால் மூளையில் பாதிப்பு ஏற்படுமா?
பதிலளிக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் எம்.ஏ.அலீம்.
தலையின் மேலே என்று சொல்லியிருக் கிறீர்கள். தலையில் கபால எலும்புக்கு மேலே வரும் கட்டிகள் மூளையைப் பாதிக்காது. அதே மாதிரி கபால எலும்பிலி ருந்து மேல் நோக்கி வளரும் கட்டிகளா லும் மூளை பாதிக்கப்படாது.
ஆனால், ஆஸ்டிமா (Osteoma) என்கிற கபால எலும்பிலிருந்து கீழ் நோக்கி உள்ளே கட்டி வளர்ந்தால், சில நேரம் தொந்தரவுகள் வரலாம். இது அரிதாகவே வரக்கூடியது. அதேநேரத்தில் மூளையில் உருவாகக்கூடிய புற்றுநோய்க் கட்டி, நீர்க்கட்டி, சாதாரண கட்டி என எதுவாக இருந்தாலும் அது உருவாகியுள்ள இடம், அழுத்தும் இடத்தைப் பொறுத்து மூளையில் பாதிப்புகள் ஏற்படும்.