காதில் சீழ் வடிவதற்கு என்ன தீர்வு? | நலம் வாழ கேள்வி - பதில்

காதில் சீழ் வடிவதற்கு என்ன தீர்வு? | நலம் வாழ கேள்வி - பதில்
Updated on
1 min read

காதில் அடிக்கடி சீழ் வடிவதற்கு நடுக்காதில் ஏற்படும் நீண்டகாலத் தொற்று, மாஸ்டாய்டு பகுதியில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்று காரணமாகும் (Chronic Suppurative Otitis Media – CSOM). காதில் இருந்து குறைந்தது ஆறு வாரங்களுக்கு மேலாகச் சீழ் வந்து கொண்டிருக்கும்.

நீங்கள், நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும்போது தற்காலிகமாகச் சீழ் நிற்கும். பிறகு மீண்டும் ஏற்படும். நாள்பட்ட தொற்று, வீக்கம், காது நரம்பு பாதிப்பு, காது சவ்வில் ஏற்படும் துளை ஆகியவை காது இரைச்சலை ஏற்படுத்தலாம்.

நாள்பட்ட தொற்று எதனால் ஏற்படுகிறது?

ஸ்டெஃபிளோகோகஸ் ஆரியஸ், சூடோமோனாஸ் போன்ற பாக்டீரியாக்கள் இந்தத் தொற்றுக்கு முக்கியக் காரணங்களாகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in