மறதி நோய் பக்கவாதத்தின் பின்விளைவா? | நலம் வாழ கேள்வி - பதில்

மறதி நோய் பக்கவாதத்தின் பின்விளைவா? | நலம் வாழ கேள்வி - பதில்
Updated on
2 min read

வயது 63. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் வந்தது. சரிசெய்து மருந்து, மாத்திரை எடுத்துவருகிறேன். சில மாதங்களாக எனக்கு ஞாபக மறதி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது பக்கவாதத்தின் பின்விளைவா? - ஜி. கணேசன், அரக்கோணம்

வயது முதிர்வினால் மட்டுமல்ல, மருத்துவ ஆய்வுகளின்படி பக்கவாத பாதிப்பு காரணமாகவும் ஞாபகமறதி ஏற்படலாம். வயதாகும்போது, மூளையில் நிகழும் பல்வேறு மாற்றங்களால் இயல்பாகவே ஞாபகமறதி ஏற்படுகிறது.

ஆனால், சில நேரத்தில் மருத்துவ சிகிச்சை மூலம் சரிசெய்யக்கூடிய காரணங்களாலும் இது ஏற்படலாம். பக்கவாதம் எப்படி ஞாபகமறதியை ஏற்படுத்துகிறது? ஞாபகத்துக்குக் காரணமாக இருக்கும் ஹிப்போகாம்பஸ், பெரு மூளைப் புறணி (Cerebral Cortex), அமிக்டலா (Amygdala), சிறுமூளை (Cerebellum) போன்ற பகுதிகளில் ரத்த ஓட்டம் தடை அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டி ருக்கலாம்.

வேறு பகுதியில் இப்பாதிப்புகள் ஏற்பட்டால்கூட அவை மறைமுகமாக மூளை பிணையத் தொடர்பைத் துண்டித்திருக்கலாம் (Disconnection of Neural Networks). மேலும், நினைவாற்றலைச் செயல்படுத் தும் Papez Yakovlev போன்ற மூளைச் சுற்றுகள், பக்கவாதத்தினால் துண்டிக்கப் படும்போது நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in