நீங்களாகவே ஆன்டிபயாடிக் மருந்தை உட்கொள்கிறீர்களா? | மறையாத கட்டுக்கதைகள் 10

நீங்களாகவே ஆன்டிபயாடிக் மருந்தை உட்கொள்கிறீர்களா? | மறையாத கட்டுக்கதைகள் 10
Updated on
3 min read

தற்போதெல்லாம் கிளினிக்கிற்கு சளி, இருமல், காய்ச்சல் என்று வருபவர்களில் பெரும்பாலானோர், ‘ஓரிரு நாள்கள் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொண்டு விட்டோம். சரியாகவில்லை என்பதால் உங்களிடம் வந்தோம்’ என்று கூறுவது வாடிக்கையாகிவிட்டது. ஆன்டிபயாடிக் மாத்திரைகளை மிட்டாய் மாதிரி பாவிக்கும் போக்கு மக்களிடையே அதிகரித்துவருகிறது.

தாய்மார்கள்கூடத் தங்களது குழந்தைகளுக்கு வரும் சாதாரண காய்ச்சல், தொண்டை வலிக்குக்கூட மருத்துவர்களிடம், ‘ஆன்டிபயாடிக் கொடுத்துடுங்க டாக்டர். அப்பதான் குழந்தைக்குச் சரியாகும்’ என்று மருத்துவர் பரிந்துரை சீட்டைக் (Prescription) கேட்டு வாங்கும் நிலை உள்ளது.

சமூகத்தில் ஆன்டிபயாடிக்கைச் சுற்றி இருக்கும் பரவலான கற்பிதங்களைத் தகர்ப்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை வரும் காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூக்கடைப்பு போன்ற பருவகாலக் காய்ச்சல் களில் பெரும்பான்மை வைரஸ்களால் ஏற்படு பவை.

வைரஸ்களைக் கொல்லும் தன்மை ஆன்டிபயாடிக்குகளுக்குக் கிடையாது. பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை மட்டுமே உண்டு. எனவே, பருவகால வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுக்கான சிகிச்சை மட்டுமே போதுமானது.

ஆன்டிபயாடிக் அநாவசியம்

ஆண்டிபயாடிக் தேவையா, இல்லையா என்கிற முடிவை மருத்துவரிடம் விட்டு விடுவதேசிறந்தது. சுயமருத்துவம் எப்போதும் கேடுவிளைவிக்கும். தேவையற்று ஆன்டிபயாடிக்கு களை உட்கொள்ளும்போது, குடல் பகுதியில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்குத் தேவையின்றி ஊறு செய்யும் நிலை ஏற்படும்.

மக்களிடையே இருக்கும் மற்றொரு பழக்கம், ஆன்டிபயாடிக்கை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுவரை உட்கொள்வதில்லை. பரிந்துரைக்கும் அளவிலும் உட்கொள்வதில்லை.

எடுத்துக்காட்டாக, 500 மி.கி. அளவு கொண்ட ஆன்டிபயாடிக் மாத்திரையை மூன்று வேளை என்று ஐந்து நாள்களுக்குப் பரிந்துரைத்தால், காலை - இரவு என இரண்டு வேளை உட் கொள்வது, அறிகுறிகள் சற்றுக் குறைந்ததும் ஆன்டிபயாடிக் மருந்தை முன்கூட்டியே நிறுத்திவிடுவது என்று இருக்கின்றனர்.

இன்னும் சிலர், 500 மி.கி. மாத்திரை தனக்கு ஒத்து வராது என்று முடிவுசெய்து, மூன்று வேளையும் அரை மாத்திரை (250 மி.கி.) சிகிச்சைக்கு மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு ஆன்டிபயாடிக் மருந்துகளை நம் இஷ்டத்துக்கு உட்கொள் வதால், இந்த மருந்துகளுக்கு எதிராக பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in