டிஜிட்டல் டீடாக்ஸ்: நச்சை நீக்குவோமா? | உள்ளங்கையில் ஒரு சிறை 25

டிஜிட்டல் டீடாக்ஸ்: நச்சை நீக்குவோமா? | உள்ளங்கையில் ஒரு சிறை 25
Updated on
2 min read

திறன்பேசிப் பயன்பாடும் ஒரு போதைதான் என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். போதைப் பொரு ளுக்கு அடிமையாவதன் மிக முக்கிய அம்சம் கட்டுப்பாடு இல்லாமல் போவது.

மது அருந்துபவர்கள் ‘ஒரே ஒரு கட்டிங் மட்டும் அடித்து விட்டு நிறுத்திவிடுவேன்” என ஆரம்பித்து, பின்னர் நிறுத்தவே முடியாத அளவுக்கு மூழ்கிப்போவது போலத்தான் திறன்பேசிப் பயன்பாடும். ஓர் ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு வந்துவிடலாம் எனச் சென்று, அதற்குள்ளேயே மூழ்கிவிடுகிறோம்.

இதுதான் முதல் படி

போதைப் பழக்கத்திலிருந்து வெளியேற அளிக்கப்படும் சிகிச்சையின் முதல்படி நச்சு நீக்கம் (Detoxification). அதாவது, அந்தப் போதைப் பொருளை உடலிலிருந்து முழுமை யாக வெளியேற்றி, அதனால் உடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாகக் குணப் படுத்துவது.

டீடாக்ஸ் என்கிற வார்த்தை சமீப காலத்தில் பிரபலமான ஒன்று. பொதுவாக உடலின் கழிவுகளை அகற்ற, புத்துணர்ச்சி தரும் உணவு, மருந்து, பயிற்சிகளை டீடாக்ஸ் என்கிறார்கள். அதுபோலத் திறன்பேசிகளின் பயன்பாட்டுக்கு அடிமையாவதிலிருந்து வெளியேறுவதன் முதல்படி டிஜிட்டல் டீடாக்ஸிஃபிகேஷன் (Digital Detoxification).

தீவிரமாகப் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை ஏதேனும் மருத்துவமனை அல்லது மறுவாழ்வு மையத்தில் சேர்த்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும். அதைப் போலவே அதீதத் திறன்பேசி பயன்பாட்டால் அடிமை ஆகிவிட்டதிலிருந்து மீட்பதற்கும் தீவிரமான, அதிரடி சிகிச்சை தேவை. தென்கொரியா போன்ற நாடுகளில் இதற்கான மையங்கள் திறக்கப்பட்டிருக் கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in