இரும்புச்சத்துக்கு பேரீச்சம் பழம் போதுமா? | மறையாத கட்டுக்கதைகள் 04

இரும்புச்சத்துக்கு பேரீச்சம் பழம் போதுமா? | மறையாத கட்டுக்கதைகள் 04
Updated on
3 min read

பேரீச்சம் பழங்கள் இரும்புச்சத்தை உயர்த்தி ரத்தசோகையைக் குணப்படுத்தும் என்பது சமூகத்தில் நிலவும் ஒரு நம்பிக்கை. பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பது உண்மைதான். எனினும், அதை மட்டுமே சாப்பிட்டால் போதும், ரத்தசோகை குணமாகிவிடும் என்பது கற்பிதம்.

பேரீச்சையில் இரும்புச்சத்தைவிட, எலும்புகளின் வலிமைக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இதய நலனுக்குத் தேவையான பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகமாக உள்ளன.

ரத்தசோகை

ரத்த சோகையை உணவு மூலம் எப்படிச் சரி செய்வது? உடலில் சராசரியாக இருக்க வேண்டிய ரத்தச் சிவப்பு அணுக்களிலும் ஆக்சிஜனைக் கடத்தும் விகிதத்திலும் ஏற்படும் குறைபாட்டு நோய் ‘ரத்தசோகை’ (அனீமியா).

ரத்தச் சிவப்பு அணுக்களில் ‘ஹீமோகுளோபின்’ எனும் புரதம் உள்ளது. இதில் ஹீம் எனும் இரும்புச்சத்தும், குளோபின் எனும் புரதச்சத்தும் இணைந்துள்ளன. நுரையீரலால் சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜனை உடல் முழுவதும் ஏற்றிச் செல்லும் படகாக ஹீமோகுளோபின் செயல்படுகிறது.

இது நன்றாக இருந்தால்தான், சிவப்பு அணுக்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஹீமோகுளோபின் நன்றாக இருக்க உடலில் இரும்புச்சத்தைச் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

இரும்புச்சத்தின் தேவை

ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூறு உருவாக நான்கு இரும்புச்சத்து அணுக்கள் தேவை. உடலில் உள்ள ட்ரில்லியன் கணக்கான செல்கள்

சுவாசிக்கவும், ஆற்றல் உருவாக்கத்துக்கும் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., புரதங்கள் உருவாக்கப்படுதல், மரபணுக்கள் வெளிப்படுதல் ஆகிய முக்கியப் பணிகளுக்கு இரும்புச்சத்து அவசியம்.

இரும்புச்சத்தை உடலால் உருவாக்கிக்கொள்ள இயலாது என்பதால் உணவின் மூலம் மட்டுமே அதைப் பெற முடியும். ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைக்குத் தினமும் 0.27 மி.கி., மாதவிடாய் நிகழும் வயதில் இருக்கும் பெண்கள் 18 மி.கி., மாதவிடாய் நின்ற பெண்கள், ஆண்களுக்குத் தினசரி 8 மி.கி., கர்ப்பிணிகளுக்கு 27 மி.கி. இரும்புச்சத்து தேவை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in