போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட…

போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட…
Updated on
1 min read

சர்வதேச போதைத் தடுப்பு நாள்: ஜூன் 26

போதைப் பழக்கத்தை ஒரு பிரச்சினையாக அங்கீகரிப்பதே சிகிச்சைக்கான முதல் படி. அடுத்தது அதிலிருந்து விடுபட உதவியைப் பெறுவது. அந்த வகையில் உதவ ஆதரவுக் குழுக்களும் தொழில் ரீதியான சேவைகளும் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.

சமச்சீர் உணவு, உடற்பயிற்சி, தகுந்த ஓய்வு, பொழுதுபோக்கு ஆகியவற்றின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குதல், ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளை மேற்கொள்ளலாம், சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடுதலின் மூலம் புகைபிடித்தல், மது, போதை ஆகியவற்றில் இருந்து ஒருவர் விடுபட முடியும்.

யோகா, தியானம்

போதைப் பழக்கத்தைத் தடுப்பதிலும், போதைக்கு அடிமையானவர்களை மீட்பதிலும் யோகாவும் தியானமும் பயனளிக்கும்.

உளவியல் சிகிச்சை

ஒரு சிறப்பு மருத்துவரிடம் நேரடியாகவோ குடும்ப சிகிச்சையோ பெறலாம். போதைப்பொருளுக்கான அடங்கா வெறி, போதைப்பொருளைத் தவிர்த்தல், அதனால் ஏற்படக்கூடிய சுணக்கம் ஆகியவற்றைக் கையாளுவதன் மூலம் போதைப் பழக்கத்தை மாற்றும் சிகிச்சை பலனளிக்கும். இந்த நடைமுறையில் நோயாளியின் குடும்பமும் இணைந்து ஈடுபட்டால், நல்ல பலன் கிடைக்கும் சாத்தியம் உண்டு.

சுயஉதவிக் குழு

தம்மைப் போலவே பிரச்சினை உள்ளவர்களைச் சந்திப்பதன் மூலம் நோயாளி உத்வேகம் பெறுகிறார். கல்வி, தகவல் பரிமாற்றத்துக்கும் சுயஉதவிக் குழுக்கள் உதவியாக இருக்கின்றன. ஆல்கஹாலிக் அனானிமஸ், நர்கோடிக்ஸ் அனானிமஸ் போன்றவை இதற்குச் சிறந்த உதாரணங்கள். குழுவில் இணையும் மருத்துவர்களிடம் இருந்து நிக்கோடினுக்கு அடிமையானவர்கள் உதவி பெறலாம்.

பின்விளைவுகள்

நோயாளியின் உடலில் இருந்து விரைவில் போதை தரும் பொருட்களை அகற்றுவதே போதைத் தடுப்பின் முக்கிய நோக்கம். சில நேரம் போதைப் பொருளின் அளவைப் படிப்படியாக குறைத்துக் கொடுத்துவருவதும் உண்டு. சில நோயாளிகளுக்கு போதைப்பொருளுக்கு மாற்றான பதில்பொருட்கள் கொடுக்கப்படும். ஒருவருடைய சூழ்நிலைக்கு ஏற்ப உள் அல்லது வெளி நோயாளியாக சிகிச்சை பெற மருத்துவர் பரிந்துரைப்பார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in