

‘ஆண்களின் இதயமும் பெண்களின் இதய மும் ஒன்றுபோல் இருக்கும்’ என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. வயதும் உடல் எடையும் சமமாக இருக்கிற ஓர் ஆணின் இதயத்தோடு ஒரு பெண்ணின் இதயத்தை ஒப்பிட்டால், சில வித்தியாசங்கள் இருக்கும். இந்த வித்தியாசங்கள் பெண்ணின் இதயப் பாதிப்புகளுடன் தொடர்பு கொண்டிருக்கும்.
மெலிந்த இதயம் - சிறிய ரத்தக் குழாய்: பெண் இதயத்தின் எடை, ஆணின் இதயத்தைவிடக் கால்வாசி குறைவாக இருக்கும். இதயச் சுவர்கள் மெலிந்திருக்கும். இதயத் தமனிகள் (Coronary arteries) நுண்மையாக இருக்கும். இதய அறைகள் அளவில் சிறுத்திருக்கும். இதயத் துடிப்பின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும்.