

தொற்று நோய்களுக்கான தடுப்பூசியோ தடுப்பு முறைகளோ சாதாரணமாக நமக்குக் கிடைத்துவிடவில்லை. அதற்காக அறிவியலாளர்கள் நீண்ட காலமாகப் போராடித்தான் தீர்வைக் கண்டறிந்தனர். வெறிநாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயைத் தடுக்கத் தடுப்பூசியைக் கண்டறிந்து, மனிதக் குலத்துக்கு மகத்தான சேவையாற்றியவர் பிரெஞ்சு வேதியியலாளரும் நுண்ணுயிரியலாளருமான லூயி பஸ்தேர்.
தூண்டிய நிகழ்வு: இன்று தெரு நாய்கள் பற்றியும், தெருவில் அலையும் வெறி நாய்கள் கடிப்பதால் ஏற்படும் ரேபிஸ் நோய் பற்றியும் தீவிரமாகப் பேசப்படுகிறது. 1880களிலும் இப்படியான நிலை இருந்தது. ஆம், அந்தக் காலக்கட்டத்தில் வெறிநாய்க்கடி மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. அப்போது நாய்க்கடிக்குத் தடுப்பு மருந்தும் கிடையாது.