

கருப்பைச் செயல்படும் நாள்வரை பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், மருத்துவத் துறையின் வளர்ச்சியால், அந்த நிலை ஓரளவுக்கு மாறியது. கருத்தடைக் கருவிகளும் கருக்கலைப்பு முறைகளும் பெண்களுக்கு ஓரளவுக்கு ஆசுவாசம் அளித்தன.
ஆணுறை, மாத்திரைகள், காப்பர் டி, ஹார்மோன் ஊசிகள், அறுவை சிகிச்சை என ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு வகையான கருத்தடை முறைகளும் கருவிகளும் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் கருத்தடைக் கருவி களைப் பெண்களே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இது அவர்களது இனப்பெருக்க நலனை மட்டுமல்லாமல் மன நலத்தையும் மோசமாகப் பாதிக்கக்கூடும்.