

செயற்கை இழைகள், சாயங்களால் உருவாக் கப்பட்ட ஆடைகளையே நம்மில் பலரும் அணிகிறோம். வேதிச் சேர்க்கை உள்ள இந்த ஆடைத் தயாரிப்பு முறையில் இருந்து மாறுபடுகிறது பாரம்பரிய ஆடைத் தயாரிப்பு முறை. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த ஆடைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புவோருக்கான ஒரு திருவிழா சென்னையில் நடைபெற்றுவருகிறது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத இயற்கை இழைகள், இயற்கைச் சாயங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இன்றும் சில அமைப்புகள் ஆடைகளைத் தயாரிக்கின்றன. அப்படி, ஐ.எச்.எம்.சி. அமைப்பு (India Handmade Collective), துலா, பொற்கை, கலம் பதிக் போன்ற அமைப்புகளோடு சேர்ந்து ‘இயற்கைச் சாயங்கள், கைத்தறி ஆடை’ திருவிழாவை ஒருங்கிணைத்துள்ளது.