

சிகரெட், பீடி, மது... இவற்றுக்கு மட்டும்தான் இதயத்தோடு தொடர்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம் உடல் எடைக்கும் இதயத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பெற்றோரிடம் பொதுவான ஒரு குணம் உண்டு. குழந்தைகள் ஒல்லியாக இருந்தால், “டானிக் எழுதிக் கொடுங்க, டாக்டர். சீக்கிரம் உடம்பு வைக்கணும்” என்று டாக்டர்களிடம் ஓடிவருவார்கள்.
“நோய் எதுவும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும்; குண்டாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்று டாக்டர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஊடக விளம்பரங்களில் வரும் குழந்தை களைப் போன்று தங்கள் குழந்தைகளும் குண்டு குண்டாக இருந்தால்தான் அழகு, ஆரோக்கியம்!