

உலகளவில் 80% குழந்தைகள், தூக்கமின்மைக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மையானது உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நமது அன்றாடச் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
முதியவர்களிடம் பரவலாகக் காணப்பட்ட தூக்கமின்மைக் கோளாறு தற்போது குழந்தைகள், பதின்பருவத்தினரிடம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிக நேரம் தொலைக்காட்சி, திறன்பேசி, வீடியோ கேம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் இரவில் குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்குவதில்லை.