அதிகரிக்கும் மலேரியா

அதிகரிக்கும் மலேரியா
Updated on
1 min read

உலக சுகாதார அமைப்பு 2024 இன் மலேரியா அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேரியா பரவல், இறப்பு ஆகியவை அதிகரித்திருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது. ‘அதிகரித்துவரும் வெப்பநிலை, தீவிர காலநிலை மாற்றம் காரணமாக மலேரியா அபாயம் அதிகரித்துள்ளது.

2022இல் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை 22.5 கோடியாக இருந்த நிலையில், 2023இல் உலக அளவில் மலேரியாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 22.6 கோடியாக அதிகரித்துள்ளது. 2015 முதலே மலேரியா பாதிப்பு உலக அளவில் அதிகரித்துவருகிறது. குறிப்பாக எத்தியோப்பியா, காங்கோ, நைஜீரியா, மடகாஸ்கர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மலேரியா பரவல் அதிகரித்துள்ளது.

2015இல் மலேரியாவால் ஏற்பட்ட இறப்பு 5,78,000 ஆக இருந்த நிலையில் 2023இல் 5,97,000 ஆக அதிகரித் துள்ளது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மலேரியா பாதிப்பு 2017இல் 60 லட்சமாக இருந்த நிலையில் கரோனா பாதிப்புக்குப் பிறகு 2023இல் 20 லட்சமாகக் குறைந்துள்ளது.

“மலேரியாவால் இனி யாரும் இறக்கக் கூடாது; இருப்பினும், மலேரியா நோய் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் மக்களிடம் தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இளம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியா அச்சுறுத்தலைத் தவிர்க்க ஆப்பிரிக்க நாடுகளில் தீவிர சுகாதார நடவடிக்கைகளும் அதற்கான நிதியும் தேவைப்படுகின்றன” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in