எறும்பு ஏன் பெரிதாகவில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்

எறும்பு ஏன் பெரிதாகவில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

காலில் ஏன் வெடிப்பு வருகிறது, டிங்கு? - ர. தக்ஷ்ணா, 8-ம் வகுப்பு, நாச்சியார் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.

பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தோல் வறண்டு, தடிமனாகி வெடிப் பதைத்தான் பாதவெடிப்பு என்கிறோம். நாம் நடக்கும்போது குதிகால் பகுதியில் அதிக அழுத்தம் கொடுப்பதால், குதிகாலுக்கு அடியில் உள்ள கொழுப்புத் திசுக்கள் விரிவடைகின்றன.

இதனால் அந்தக் கடினமான தோலில் சிறிய வெடிப்புகள் உருவாகின்றன. நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பவர்களுக்கு, கடினமான தரையில் நடப்பவர்களுக்கு, பாதங்களுக்குப் பொருத்தமில்லாத காலணிகளை அணிபவர்களுக்கு, வெறும் காலில் நடப்பவர்களுக்கு, அதிக எடை, தைராய்டு, நீரிழிவு போன்ற காரணங்களால் பாதவெடிப்பு ஏற்படுகிறது.

இந்தப் பாதவெடிப்பு பலருக்கும் ஏற்படலாம். சிறிய வெடிப்புகளால் பிரச்சினை இல்லை. பெரிய வெடிப்புகளாகவும் ரத்தம் கசிந்தாலும் வலி இருந்தாலும் மருத்து வரைப் பார்க்க வேண்டும், தக்ஷ்ணா.

எறும்பு தினமும் சாப்பிட்டாலும் ஏன் சிறிய உருவமாகவே இருக்கிறது, டிங்கு? - ச. திவ்யா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

ஓர் இனம் அது தகவமைத்துக் கொண்ட அளவிலேயே நிலைத்திருக்கும். எறும்புகள் எப்போதும் உழைத்துக்கொண்டே இருக் கின்றன. எனவே அவை சாப்பிடும் உணவு, உடனே ஆற்றலாக மாறி, எரிந்துவிடுகிறது.

எறும்பைச் சுற்றிக் கவசம் போல் வெளி எலும்புக்கூடு இருக்கிறது (Exoskeleton). இது கைட்டின் என்கிற பொருளால் ஆனது. இது விரிந்துகொடுக்காது. எனவே எறும்பு முழுமையாக வளர்ந்த பிறகு, அதற்கு மேல் பெரிதாக இயலாது, திவ்யா.

எறும்பு ஏன் பெரிதாகவில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்
அன்றாடம் பயன்படுத்தப்படும் Gகள்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 37

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in