ஒன்றரை மணிநேரம் வித்தியாசம் ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

ஒன்றரை மணிநேரம் வித்தியாசம் ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

என் அப்பா துபாயில் வசிக்கிறார். நாங்கள் காரைக்குடியில் வசிக்கிறோம். என் அப்பாவிற்கும் எங்களுக்கும் 1 1/2 மணி நேரம் வித்தியாசம். அது ஏன், டிங்கு? - பா. மித்ரன் பாஸ்கரன், 4-ம் வகுப்பு, ராமநாதன் செட்டியார் மாநகராட்சித் தொடக்கப் பள்ளி, காரைக்குடி.

பந்து போன்ற வடிவத்தில் பூமி இருக்கிறது. இது தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும்போது, சூரியனின் கதிர்கள் ஒரே நேரத்தில் எல்லாப் பகுதிகளிலும் விழுவதில்லை. சூரியனின் கதிர்கள் முதலில் கிழக்குப் பகுதியில் விழுந்து, பின்னர் மேற்குப் பகுதியில் விழுகின்றன.

இதனால் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்தியாவில் சூரியன் முதலில் உதித்து, மேற்குப் பகுதியான துபாய்க்குச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரமாகி விடுகிறது.

அதாவது நீங்கள் 5.30 மணிக்குச் சூரியனைப் பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் அப்பா நம் நேரப்படி 7 மணிக்குச் சூரியனைப் பார்ப்பார். அப்போதுதான் துபாயில் 5.30 மணியாக இருக்கும்.

ஒவ்வொரு நாட்டின் நேர இடைவெளியைக் கணக்கிடவே ’நேர மண்டலங்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளுடன் நேரத்தை ஒப்பிடும்போது UTC (Coordinated Universal Time) என்கிற பொதுவான நேரத்தைக் கணக்கில் கொள்கிறார்கள். இந்தியாவில் மாலை 6 மணி என்றால், துபாயில் மாலை 4.30 மணியாக இருக்கும், மித்ரன் பாஸ்கரன்.

சக்கரம் முக்கியமான கண்டுபிடிப்பு என்றார் அப்பா. ஏன் சக்கரத்துக்கு, ‘சக்கரம்’ என்று பெயர் வந்தது, டிங்கு? - வி.கு. தண்மதி, 4-ம் வகுப்பு, கம்மவார் தொடக்கப் பள்ளி, அருப்புக்கோட்டை.

‘சக்ர’ என்கிற சமஸ்கிருத எழுத்தில் இருந்து வந்தது ‘சக்கரம்’ என்கிற சொல். ’சக்ர’ என்றால் மீண்டும் மீண்டும் சுழல்தல் என்று பொருள். சக்கரம் சுழன்று சுழன்று செல்வதால், சக்கரம் என்கிற பெயர் வந்திருக்கிறது, தண்மதி.

ஒன்றரை மணிநேரம் வித்தியாசம் ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்
எல்பிஜி, பிஎன்ஜி வித்தியாசம் என்ன? | டிங்குவிடம் கேளுங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in