ஆங்கிலத்தில் பிரபல தமிழ்க் கதைகள் | விடுமுறையில் வாசிப்போம்

ஆங்கிலத்தில் பிரபல தமிழ்க் கதைகள் | விடுமுறையில் வாசிப்போம்
Updated on
1 min read

தன் பெயரை மறந்த ஈ, தன் பெயரைத் தேடிப் போகும் கதையான 'என் பெயர் என்ன?', அறுந்து போன வாலுக்கு இணையாக டமாரத்தைப் பெற்று ‘வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும்' எனக் குரங்கு பாடும் கதையான ‘குரங்கும் டமாரமும்', புதிதாகச் சாப்பிட்ட உணவு வகையான கொழுக்கட்டையின் பெயரை மறந்து, அதன் பெயரைத் தவறாக அத்திரிபாச்சா என்று நினைத்துக்கொண்டு ஊரையே ஒருவன் குழப்பிய கதையான ‘அத்திரிபாச்சா கொழுக்கட்டை', ‘நிலா நிலா ஓடி வா' என்கிற பாடலுக்குப் பின்னால் இருக்கும் கதை, காக்கா வடையைத் திருடிய கதையின் மற்றொரு வடிவம்... இப்படித் தமிழ்நாட்டில் அதிகம் கூறப்பட்ட கதைகளை ஆங்கிலத்தில் தொகுத்துள்ளார் நாராயண் தேவநாதன். ‘Folktales from Tamilnadu' என்கிற இந்தத் தொகுப்பில் இதுபோல் 21 கதைகள் உள்ளன.

ஒவ்வொரு கதைக்கும் அழகான வண்ண ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. கதைகளைத் தாண்டி அம்மிக் கல்லு, தோசைக் கல்லு, முறுக்கு அச்சு, குத்துவிளக்கு, வேட்டி, கோலம், வெங்கலப் பானை, மல்லிகைப் பூ, பாயசம், ஊஞ்சல், அஞ்சறைப் பெட்டி எனத் தமிழ்நாட்டுக்கே உரிய பிரத்யேகப் பொருள்கள் குறித்த படமும் விளக்கமும் ஆங்காங்கே தரப்பட்டுள்ளது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

Folktales from Tamilnadu, Narayan Devanathan, Red Panda.

ஆங்கிலத்தில் பிரபல தமிழ்க் கதைகள் | விடுமுறையில் வாசிப்போம்
அறிவியல் கதை அமுதம் | விடுமுறையில் வாசிப்போம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in