Published : 12 Apr 2017 09:53 am

Updated : 16 Jun 2017 14:25 pm

 

Published : 12 Apr 2017 09:53 AM
Last Updated : 16 Jun 2017 02:25 PM

குழந்தைப் பாடல்: சுண்டெலி

சுண்டெலி, சுண்டெலி,

துறுதுறுத்த சுண்டெலி!




பண்டமெல்லாம் கெடுத்திடும்

பானை சட்டி உருட்டிடும்.

கண்ட கண்ட பொருளெலாம்

கடித்து நாசம் செய்திடும்.



சுண்டெலி, சுண்டெலி,

துறுதுறுத்த சுண்டெலி!



பையில் ஓட்டை போட்டிடும்

பணத்தை இழக்கச் செய்திடும்.

கையைக் காலை இரவிலே

கடித்து என்னை எழுப்பிடும்.



சுண்டெலி, சுண்டெலி

துறுதுறுத்த சுண்டெலி.


குழந்தைப் பாடல்சிறுவர் பாடல்சுண்டெலி பாடல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author