தமிழர் பாதி; ரஷ்யர் பாதி!

தமிழர் பாதி; ரஷ்யர் பாதி!
Updated on: 
2 min read

ஒரு ரஷ்ய இளைஞர் சரளமாகத் தமிழ் பேசும் காணொளியைக் கண்டதும், ‘எல்லாம் ஏஐ ஜாலம்’ என்றே சட்டென்று தோன்றும். உற்றுக் கவனித்து அடுத்தடுத்த காணொளிகளைக் கண்டால், இது செயற்கை நுண்ணறிவு அல்ல, தமிழ் அறிவுமிக்க இளைஞனின் திறமை என்பது புரிகிறது.

‘Tamil in Russia’ யூடியூப் அலைவரிசை, ‘Asir Rahman’ இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகப் பக்கங்களின் ஊடாகத் தமிழில் பேசி ஆயிரத்துக்கும் அதிகமான காணொளிகளை ஆசிர் ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார்.

இவருடைய தாய் ரஷ்யர், தந்தை மருத்துவர் நியாஸ் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர். ரஷ்யாவின் ரஸ்தவ் ஆன் டான் நகரில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். முடித்த கோட்டைப்பட்டினத்துக்காரர் நியாஸ், மருத்துவப் பணியோடு சேர்த்து அயலகக் கல்வி ஆலோசனை மையம் ஒன்றையும் நடத்திவருகிறார்.

இவர்களுடைய மகனான ஆசிர் ரஷ்யாவில் பிறந்திருந்தாலும் சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் வளர்ந்தவர். அதனால், தமிழ் மொழியும் பண்பாடும் ஆசிர் ரஹ்மானிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்டன. அதிலும், வேற்று மொழியினர் தமிழை மிகவும் கவனமாக உச்சரிப்பதுபோல் அல்லாமல், கிராமத்துப் பேச்சுவழக்கில் ஆசிர் பேசும் அழகு அசத்துகிறது.

ரஷ்யாவில் இட்லி!

தற்போது ரஸ்தவ் ஆன் டான் நகரில் வசிக்கும் இவர், அங்கிருந்துதான் தனது யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கங்களுக்கான காணொளிகளைத் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

Loading content, please wait...

X