

பிரபஞ்ச அழகிப் போட்டி இந்த முறை முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது. ஆம், இந்த ஆண்டு நவ.24இல் கரீபியத் தீவுகளில் உள்ள போர்ட்டோரி கோவில் நடைபெற இருப்பது 75ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டி.
இந்தியா சார்பில், கேரளத்திலிருந்து முதன்முறையாகப் பிரபஞ்ச அழகிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார், காஸியா லிஸ் மெஜோ.
மிஸ் யுனிவர்ஸ் தொடக்கம்
நவீன உலகின் முதல் பிரபஞ்ச அழகிப் போட்டி 1952இல் நடைபெற்றது. அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டி நடைபெற்று வருகிறது. கலிபோர்னியாவைச் சேர்ந்த பசிபிக் நிட்டிங் மில்ஸ் என்கிற நிறுவனம், தங்கள் தயாரிப்பான கேடலினா என்கிற நீச்சல் உடையைச் சந்தைப்படுத்தும் விதமாக ‘மிஸ் அமெரிக்கா’ போட்டியை நடத்திவந்தது.
1951இல் இப்போட்டியில் வெற்றி பெற்ற லோயண்டா பெட்பெஸ் என்கிற மாடல் இந்த கேடலினா உடையை அணிந்து விளம்பரப்படுத்த மறுத்தார். இதனால் ‘மிஸ் அமெரிக்கா’வுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற அந்நிறுவனம் பிறகு, ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்கிற போட்டியை அறிமுகப்படுத்தியது.