

பேக்கி ஜீன்ஸ், கார்கோ பேன்ட், டெனிம்-ஆன்-டெனிம்
புத்தாயிரத்துக்குப் பிறகு ‘பழைய ஃபேஷன்’ என்று ஓரங்கட்டப்பட்ட ‘Y2K’ ஃபேஷன், இன்று மீண்டும் ஜென் இசட் தலைமுறையின் விருப்பத்திற்குரிய தேர்வாக மாறியிருக்கிறது.
அதாவது, 2000களின் தொடக்கத்தில் பிரபலமாக இருந்த ஃபேஷன் ஸ்டைல்தான் ‘Y2K’ ஃபேஷன். பழைய ஸ்டைல்களை இன்றைய ரசனைக்கு ஏற்ற வகையில் புதிதாக மாற்றியுள்ளனர் ஜென் இசட் தலைமுறையினர்.
பேக்கி ஜீன்ஸ் (Baggy Jeans)
தொண்ணூறுகளில் வெளியினான ‘ஜென்டில்மென்’ படத்தில் ‘நாங்க ஜீன்ஸ் பேன்ட்டுதான் போட்டாக்கா, நீங்க பேக்கி பேன்ட்ட தான் பார்ப்பீங்க..’ என்கிற பாடல் வரி வரும்.