மாஸ் குறையாத மாரியோ!

மாஸ் குறையாத மாரியோ!
Updated on
2 min read

இன்னும் இரண்டு நாள்களில் (செப்டம்பர் 13) கேமிங் உலகின் முதல் ஸ்டார், ‘சூப்பர் மாரியோ’வுக்கு 41ஆவது பிறந்தநாள். சாதாரண 8 பிட் பிக்செல் வீடியோ கேமாகத் தொடங்கி 2டி, 3டி எல்லாம் தாண்டி, ஹாலிவுட் சினிமாவிலும் இப்போது மாரியோ கொடிகட்டிப் பறக்கிறது.

உயரத்திலிருந்து தவறிக் கீழே விழுகிற பயம் எல்லாருக்கும் பொதுவானதுதான். நடுவில் கொஞ்சம் பெரிய இடைவெளி இருந்தால், யாராக இருந்தாலும் தாண்டித்தானே ஆக வேண்டும். இந்த எளிய யோசனையில் இருந்து உதித்த கதாபாத்திரம்தான் மாரியோ.

ஜப்பானிய வீடியோ கேம் வடிவமைப்பாளரான ஷிகெரு மியாமோத்தோ 1981இல், ‘டாங்கி காங்’ (Donkey Kong) என்கிற கேமிங்கை அறிமுகப்படுத்தினார். கீரை சாப்பிடும் மாவீரன் ‘பாப்பாய்’ கதாப்பாத்திரத்தை தழுவி வீடியோ கேமை திட்டமிட்டார்.

காப்புரிமை சிக்கல் ஏற்பட்டதால் ‘ஜம்ப்மேன்’ என்கிற கதாபாத்திரத்தை வடிவமைத்தார். தன்னுடைய வீடியோ கேம் அமெரிக்க மக்களைக் கவர்ந்தால், ஹிட் ஆகிவிடும் என்று சியாட்டில் நகருக்குச் சென்றார். அங்கே அவர் வாடகைக்கு இருந்த கட்டிடத்தின் உரிமையாளர் மாரியோ அர்னால்டு சிகேல் உடனான நட்பில் உருவாக்கப்பட்ட ஹீரோவுக்கு ‘மாரியோ’ என்று பெயர் சூட்டினார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in