

நவீன் - தீபிகா
கல்லூரிக் கலைவிழா, அலுவலக நிகழ்ச்சி, திருமண வரவேற்பு, பிறந்த நாள் பார்ட்டி என்று எல்லாவிதமான கொண்டாட்டங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டுமென இளைஞர்கள் விரும்புவது டி.ஜெ. இசை நிகழ்ச்சியைத்தான். டி.ஜெ. நிகழ்ச்சியை ஆண், பெண் என இருபாலருமே நடத்துகிறார்கள். ஆனால், இதில் கணவன் - மனைவியாக டி.ஜெ. நிகழ்ச்சியை நடத்துபவர்களைப் பார்ப்பது அரிது.
அந்த வகையில் பிரபலமான ஜோடியாக வலம்வருகிறார்கள் தீபிகா - நவீன். இவர்கள் தமிழகத்தின் முதல் டி.ஜெ. கணவன் - மனைவி ஜோடி. ஒருகாலத்தில் ஆர்கெஸ்ட்ரா இல்லாத நிகழ்ச்சிகளைக் காண்பது அரிது. இப்போது அந்த இடத்தை டி.ஜெ. (டிஸ்க் ஜாக்கி) பிடித்துவிட்டது.
வைப் பாடல்களின் இசையைச் சத்தமாக ஒலிக்கவிடுவதுதான் டி.ஜெ. இந்த வகையான இசை இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகிவிட்டது. அந்த இசைக்கு ஏற்ப வயது வித்தியாசம் இல்லாமல் ஆடி ரகளை செய்கிறார்கள். அதாவது, ‘ஆடினே இருப்போம்’ என டி.ஜெ. நிகழ்ச்சிகளுக்குச் சென்று ‘ஸ்டேட்டஸ்’ போடுவதும் இளைஞர்களிடையே ‘ட்ரெண்ட்’ ஆகிவிட்டது.
ஜோடி டி.ஜெ. - டி.ஜெ. நிகழ்ச்சியை ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனியாக அரங்கேற்றுவதைப் பார்த்திருப்போம். கணவன் - மனைவியாக இணைந்து இந்த நிகழ்ச்சியை அரங்கேற்றுவதால் தீபிகாவும் நவீனும் சோஷியல் மீடியா உலகில் ரொம்பப் பிரபலம். இதில் இணைந்து பணியாற்றும் ஐடியா இவர்களுக்கு எப்படித் தோன்றியது? “டி.ஜெ. செய்வதற்கு முன்பு ஆசிரியர் பணியில் இருந்தேன்.