அசத்திய தமிழ் முகங்கள்! | ஆசிய விளையாட்டு

அசத்திய தமிழ் முகங்கள்! | ஆசிய விளையாட்டு
Updated on: 
2 min read

ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் குறிப்பிடத்தகுந்த சாதனைகளைப் படைத்து, நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

வித்யா ராம்ராஜ்

தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று வகையான பதக்கங்களையும் வென்று அசத்தி இருக்கிறார், கோவையைச் சேர்ந்த தங்க மகள் வித்யா.

மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால தேசியச் சாதனையை முறியடித்த அவர், மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் அபாரமாக ஓடி இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல முக்கியப் பங்காற்றினார்.

அபிநயா ராஜராஜன்

தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட 19 வயது இளம் தடகள வீராங்கனை. தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியிலேயே கலப்பு 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்று முத்திரை பதித்திருக்கிறார்.

கமாலினி

2026 ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்த மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீராங்கனை. இறுதிப் போட்டியில் இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்!

அபய் சிங்

பெயரைப் பார்த்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா என்கிற சந்தேகம் எழலாம். ஆனால், அபய் சிங் சென்னை மண்ணில் பிறந்து வளர்ந்தவர். மலேசியாவின் நடப்பு சாம்பியனும் உலகின் முன்னணி வீரருமான ஈன் யோவ்-வை எதிர்கொண்ட இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபய், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் ஸ்குவாஷ் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். இவரும் வேலவனும் இணைந்து ஆடவர் அணியில் வெண்கலம் வென்றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in