

இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ்.தோனிக்கு 45ஆம் பிறந்த நாள் (ஜூலை 7). கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட்கீப்பர் என கிரிக்கெட்டில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர். அவரைப் பற்றிய சில அரிய தகவல்கள்:
எம்.எஸ்.தோனியின் ஜெர்சி எண் 7 என்பது எல்லோருக்கும் தெரியும். ஜூலை 7இல் பிறந்த அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையும் 7ஆம் எண்ணில்தான் தொடங்கியது. ஆம், 2004இல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமானபோது, முதல் போட்டியின் முதல் பந்திலேயே ரன் அவுட் முறையில் அவுட் ஆனார் தோனி.