பத்து வருஷம் முன்னாடி எப்படி இருந்தீங்க ?

பத்து வருஷம் முன்னாடி எப்படி இருந்தீங்க ?
Updated on
2 min read

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயம் டிரெண்டாவது வழக்கம். சில நேரம் அவை சலிப்பாகவும் இருக்கும். வியப்பாகவும் இருக்கும். அப்படி 2026ஆம் ஆண்டின் முதல் வைரல் ‘2016 டிரெண்டு’தான்.

2016 முடிந்து சரியாகப் பத்து ஆண்டுகள் ஆகின்றன. சரி, இதிலென்ன பிரமாதம்? இப்படி ஒவ்வொரு பத்தாண்டும் போய்க்கொண்டுதானே இருக்கிறது என உங்கள் ‘மைண்ட் வாய்ஸ்’ கேட்பது புரிகிறது. டிரெண்டுக்கும் வைரலுக்கும் காரணம் வேண்டுமா என்ன? அலசி ஆராயாமல் நீங்களும் இந்த 2016 டிரெண்டில் குதித்துவிடுங்கள் என இழுத்துப்போடுகிறார்கள் இணையவாசிகள்.

என்ன ஆனது? - 2010க்குப் பிறகான காலக்கட்டத்தில்தான் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள செயலிகள் பரவலாகின. அப்போது ‘ஃபில்டர்’ எனப்படும் ஒரு ஆப்ஷன் மிகப் பிரபலம். அதாவது, நீங்கள் ஒளிப்படம் எடுக்கும்போது, அதை மெருகூட்டிக் காட்டும் இந்த ‘ஃபில்டர்’களைப் பயன்படுத்தி எடுக்கலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in