ஒளியில் ஒளிரும் ஓவியங்கள்

ஒளியில் ஒளிரும் ஓவியங்கள்
Updated on: 
2 min read

பொதுவாக ஓவியம் வரைவதற்கு நிறங்கள், மை, தூரிகை, தாள் போன்றவைதான் தேவைப்படும். இவை எதுவுமில்லாமல் சூரிய ஒளியை அடிப்படையாக வைத்துப் புதுமையாக ஓவியம் தீட்டுகிறார் கலையரசன். காஞ்சிபுரம் சோமங்கலத்தைச் சேர்ந்த கலையரசன் இலை, நூல்களை மட்டுமே பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்கி இணையவாசிகளுக்கு விருந்து படைத்துவருகிறார்.

கை வண்ணம்: எம்.பி.ஏ. பட்டதாரியான கலையரசன், படித்த படிப்புக்கு வேலை எதுவும் கிடைக்காத சூழலில், கிடைத்த வேலையைச் செய்துவந்தார். இதன்பின் அவருடைய யோசனையில் உதித்ததுதான் சமூக ஊடக கன்டென்ட் கிரியேட்டர் அவதாரம்.

தொடக்கத்தில் ‘சோமங்கலம் மீனவன்’ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல் செய்வது, மீன் பிடிப்பது போன்ற காணொளிகளைத் தனது நண்பர்களின் உதவியுடன் பதிவேற்றிவந்தார். அவர்களுடன் நீண்ட நாள் செயல்பட முடியாமல் போனதால், தனித் திறமையுடன் தான் வரையும் ஓவியங்களின் பக்கம் கவனத்தைத் திருப்பினார்.

“எனக்குச் சிறு வயது முதலே ஓவியம் வரைவது என்றால் உயிர். சில சந்தர்ப்பச் சூழல்களால் அதிலிருந்து சில காலம் தள்ளி இருந்தேன். ஒரு கட்டத்தில் எனது நண்பர்கள் உதவியின்றிச் செயல்பட முடியாமல் போனது. இதன் பிறகுதான் ஓவியம் வரைந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது என முடிவெடுத்தேன். தொடக்கத்தில் தாளில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in