ஆபிஸ் பரிதாபங்களும் காமெடி மீம்களும்

ஆபிஸ் பரிதாபங்களும் காமெடி மீம்களும்
Updated on: 
2 min read

பள்ளி, கல்லூரி நாள்களில் படிக்காமல் விளையாட்டுத்தனமாகச் சுற்றிவரும் பிள்ளைகளிடம் பெற்றோர் வழக்கமாகச் சொல்லும் வசனம் இது. ‘இப்ப கஷ்டப்பட்டீனா, பின்னாடி கால் மேல கால் போட்டு ஜாலியா சம்பாதிக்கலாம்’. ஆனால் நிஜத்தில், வாழ்க்கை முழுவதும் நாம் ஏதாவது ஒன்றைக் கஷ்டப்பட்டுச் செய்யத்தான் வேண்டியிருக்கும். அதற்கு, ஒரு ‘எண்ட் கார்டே’ கிடையாது.

செய்யும் வேலையில் கஷ்டமிருந்தாலும், அதையே லேசான மனநிலையுடன் அணுகினால் வாழ்க்கையில் ஜாலியாக இருக்கலாம். இந்த கான்செப்ட்டில் சில மீம்கள் சமூக ஊடகங்களில் வலம் வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

அவற்றுள் வித்தியாசமானது, ‘Infinity Enterprises Media’ வெளியிடும் கார்ப்பரேட் மீம்கள். சேலத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஊடக மார்க்கெட்டிங் நிறுவனம் இது. தங்களை நோக்கி சமூக ஊடப் பயனர்களை ஈர்க்க, வேலை தொடர்பான காணொளி மீம்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in