யூடியூபில் ஓர் இசைக் கலைஞர்

யூடியூபில் ஓர் இசைக் கலைஞர்
Updated on
2 min read

கரோனா என்றாலே 2020 நினைவுக்கு வந்துவிடும். பலரும் ஒளித்து வைத்திருந்த தங்களது தனித்திறமைகளை வெளிப் படுத்தியதற்கு கரோனா காலக்கட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அந்த வகையில் தனிக்கவனம் பெற்றவர்தான் இசைக் கலைஞர் சாம் சி மோகனபிரியன். பிரபல பாடல்களுக்கு ‘கவர்’ இசை உருவாக்கிப் பதிவு செய்துவரும் அவருடைய யூடியூப் அலைவரிசைக்கு ரசிகர்கள் ஏராளம்.

கீபோர்டு இசை

திருவள்ளூரைச் சேர்ந்த சாம், ஒரு 2கே கிட். கல்லூரியில் அவர் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது கரோனா பொதுமுடக்கம் அமலானதால் வீட்டில் முடங்கிக் கிடந்தார். அப்போது இசைதான் தனது தனித்திறமை என்பதைக் கண்டறிந்த சாம், யூடியூப் அலைவரிசை ஒன்றைத் தொடங்கினார்.

இதுவரை 300க்கும் அதிகமான இசைத் துணுக்குகளைப் பதிவு செய்துள்ள அவரது அலைவரிசையை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இசையமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்து வேலைகளையும் தனி ஒருவராக அவரே செய்து முடித்துவிடுகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in