

இணையத்தில் உலவும் இசைக்குழுக்களுக்கு அளவே இல்லை. இவற்றில் கவனம் பெற்று வளர்ந்துவருகிறது, ‘தம்மா தி பேண்ட்’. சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இசையின் மூலம் கொண்டுசேர்த்து வருகின்றனர், இந்த ஜென்-இசட் இளைஞர்கள்.சென்னை ஆதம்பாக்கத்தில் இயங்கிவரும் இந்த இசைக்குழு ஆரம்பத்தில் ஆறு பேருடன் தொடங்கப்பட்டது. இன்று இக்குழுவில் 35க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். கல்லூரிக் காலத்தில் ‘யங் பிளட்ஸ்’ என்கிற பெயரில் இந்த இசைக்குழு இயங்கிவந்தது.
பின்னர் ‘தம்மா தி பேண்ட்’ என்று அது மாற்றம் கண்டது. தம்மம் என்பது இயற்கையின் விதி, அறம் எனப் பொருள் தரக்கூடியது. அதற்கேற்பவே எங்களுடைய குழு இயங்கி வருகிறது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் நந்தா. சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளைப் பாடலாக்கி, மெட்டமைத்து மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்றனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் அருகே நடைபெJ்ற தூய்மைப் பணியாளர்களின் போரட்டத்தில் இந்த இசைக்குழுவின் கச்சேரி தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறார் நந்தா.