மெஸ்ஸி பத்துக்கு 10

மெஸ்ஸி பத்துக்கு 10
Updated on
2 min read

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். ஒருபக்கம் உலகமே கொண்டாடும் கால்பந்து நட்சத்திரம். மறுபக்கம், வீட்டுக்குச் சென்றதும் குழந்தைகளுடன் நேரம் செலவிட விரும்பும் அப்பா. புகழைத் தாண்டி சாதாரண வாழ்க்கையை விரும்பும் மனிதர். இதுதான் லியோனல் மெஸ்ஸியின் மறுபக்கம்.

அர்ஜென்டினா அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடியுள்ள மெஸ்ஸி, அண்மையில் முடிந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டித் தோல்விக்குப் பிறகு ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.

ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார் என்பதால், மெஸ்ஸியின் கால்பந்துப் பயணம் முழுமையாக முற்றுப்பெறவில்லை. மைதானத்தில் விளையாடும்போது ரசிகர்கள் கொண்டாடிய மெஸ்ஸியைத் தாண்டி, மைதானத்துக்கு வெளியே அவரைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்.

ரொசாரியோவின் மைந்தன்

உலகின் பல நாடுகளுக்குச் சென்றிருந்தாலும், தனது சொந்த ஊரான அர்ஜென்டினாவின் ரொசாரியோ மீது மெஸ்ஸிக்கு அன்பு அதிகம். ரொசாரியோவின் ‘நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ்’ அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் சிறுவயதில் அவரின் மிகப்பெரிய கனவாக இருந்ததாம்!

தோல்வியிலும் தளராத மனம்

அர்ஜென்டினாவுக்காகத் தொடர் தோல்விகளைச் சந்தித்த காலத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஒருகட்டத்தில் சர்வதேசக் கால்பந்திலிருந்தே விலகுவதாக அறிவித்தாலும், மீண்டும் திரும்பிவந்து தனது பயணத்தைத் தொடர்ந்து, உச்சபட்சமாக உலகக் கோப்பையையும் வென்று வாகை சூடினார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in