லிப்ஸ்டிக் எஃபெக்ட் தெரியுமா?

லிப்ஸ்டிக் எஃபெக்ட் தெரியுமா?
Updated on
2 min read

ஆடம்பரமான வீடு, சொகுசு கார், வெளிநாடுகளுக்கு அடிக்கடி உல்லாசப் பயணம் என இப்படியான ஆசைகள் யாருக்குத்தான் இருக்காது? அதிலும், ‘இன்ஸ்டா ரீல்ஸ்’ ராஜா, ராணிகள் விதவிதமா உலா வந்து ‘வாழ்க்கை வாழத்தான்’ என எந்நேரமும் உசுப்பேத்திக்கிட்டு இருக்காங்களே.

நிஜத்தில அப்படி எல்லாருக்கும் வாய்க்காதே! அதுக்காக, ‘என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே’னு புலம்புற டைப்பாக மாறப்போறதில்லை. வேற என்ன செய்யலாம்? அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்தில இருந்து தப்பிக்க ஜென் ஸீ தலைமுறையினர் கையாளுகிற குட்டித் தந்திரம்தான், ‘லிப்ஸ்டிக் எஃபெக்ட்’.

விலை உயர்ந்த பொருள்களை வாங்க முடியாதபோது, அதுக்குப் பதிலாகக் குறைந்த விலையில கிடைக்கிற சின்ன சின்ன சொகுசுப் பொருள்களை வாங்கி மனநிறைவு அடையுறதுதான் ‘லிப்ஸ்டிக் எஃபெக்ட்’.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in