

அண்மைக் காலமாக இன்ஸ்டகிராம் ரீல்களில் இருந்து கஃபே மெனுக்கள்வரை எங்குப் பார்த்தாலும் ‘மாட்சா’ தேநீர் முக்கிய இடம் பிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு விஷயம் அவ்வப்போது டிரெண்டிங் ஆவது வழக்கம். அந்த வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘மாட்சா’ (Matcha) தேநீர் வகை இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.
அதென்ன ‘மாட்சா’?
சுஷி, ராமென், மோட்சி போன்ற ஜப்பானிய உணவு வகைகள் இன்று பரிச்சயமான உணவு வகைகள் ஆகிவிட்டன. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கும் ‘மாட்சா’, ஜப்பானில் தோன்றிய ஒரு வகை கிரீன் டீ பொடி. சாதாரண கிரீன் டீயில் இலைகளைச் சுடுநீரில் சிறிது நேரம் வைத்து விட்டுப் பிறகு தூக்கி எறிந்துவிடுவோம்.