

என்னுடைய இரண்டாம் வீடு! ஏழுமலை பூங்கார்ச்சுனன் ‘வேற மாறி ஆபிஸ்’ இணையத் தொடரில் நடித்து சமூக ஊடகத்தில் வைரலாகி, ‘பிக்பாஸ் சீசன் 8’இல் பங்கேற்று இரண்டாமிடத்தைப் பிடித்தவர் சௌந்தர்யா.
‘வில்லா டு வில்லேஜ்’, ‘குக் வித் கோமாளி’ போன்ற ‘ரியாலிட்டி ஷோ’க்கள் மூலமும் வரவேற்பைப் பெற்றுள்ள சௌந்தர்யாவுடன் ஒரு சுவாரசியமான உரையாடல்.
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?
அதிகாலையில் எழுந்திரிப்பது கஷ்டம். பக்கா ‘நைட் பெர்சன்’ங்க நான்.
‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?
ஒவ்வொரு வேளையும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை அளவாகச் சாப்பிடுவேன். நடைப்பயிற்சி, ‘சைக்கிளிங்’ போவேன்.
தனித்துவமான பழக்கம்?
திறந்த மனதோடு இருப்பது.
இந்த வேலை இல்லையென்றால்?
‘பேக்கரி’ சார்ந்த தொழிலில் கவனம் செலுத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன்.
எதிர்காலத் திட்டம்?
ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து மகிழ்ச்சியா வாழணும். திட்டமிடுவது நடப் பதில்லை. Go with the flow. ‘ஸ்கை டைவ்’ செய்ய ஆசை. ஆனால், பயமா இருக்கே. உயரமான இடத்துக்குப் போக வேண்டும். நிறையப் பயணம் போகணும்.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா?
ராம்காம், திரில்லர், ஹாரர் வகைப் படங்களை அதிகம் பார்ப்பேன். புத்தக வாசிப்பு கிடையாது.
பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்?
‘இன்ஸ்டகிராம்’ - என்னுடைய இரண்டாம் வீடு. எல்லாருடனும் தொடர்பில் இருக்கவும், தகவல்களைத் தெரிந்துக்கொள்ளவும் உதவுகிறது.