கனவுலகூட நினைச்சதில்லை! - காபி வித் ஹரிஷ் குமார்

கனவுலகூட நினைச்சதில்லை! - காபி வித் ஹரிஷ் குமார்
Updated on
2 min read

‘முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தில் 'சைனிஸ்' கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 'குளுகுளு', 'போர் தொழில்', ‘லவ்வர்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் குமார்.

அண்மையில் இவர் நடித்திருந்த 'வித் லவ்' படம் வரவேற்பைப் பெற்றது. ஹரிஷ் குமாருடன் கலகலப்பான ஓர் உரையாடல்.

Q

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?

A

இரவு 2 மணிக்குத் தூங்கி காலைல 10 மணிக்கு எழுந்திரிக்கிற ஆள் நான். 'மார்னிங் பர்ச’னாக மாற விரும்பி 'நைட் பர்ச’னாக வாழ்றேன்.

Q

‘ஒர்க் அவுட்'டா, 'டயட்'டா?

A

உடலளவில் ‘ஃபிட்டா’ இருக்க மனதளவில் வலுவாக இருக்கணும். உடற்பயிற்சி, உணவு, தூக்கம் மூன்றுமே அவசியம், மாமே.

Q

தனித்துவமான பழக்கம்?

A

எந்தச் சூழலாக இருந்தாலும் காமெடி செய்யும் நகைச்சுவை உணர்வு.

Q

இந்த வேலை இல்லையென்றால்?

A

மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப் பிடிக்கும் என்பதால், ஆசிரியர் ஆயிருப்பேன். நாடக ஆசிரியராக ரெண்டு மாசம் இருந்திருக்கேனே.

Q

மறக்க முடியாத நாள்கள்?

A

வாழ்க்கையில் கஷ்டமான காலக்கட்டத்திலும் நம்பிக்கையுடன் இருந்த நாள்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in